வட கொரியா தலைவரின் சகோதரர் மலேசியாவில் படுகொலை!
வட கொரியா தலைவரின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில் தென் கொரியா அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளுக்கு சவலாக திகழ்ந்து வரும் வட கொரியா தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரரான 45 வயதான கிங் ஜோங்-நாம் மலேசியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமானநிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வட கொரியா நபர் ஒருவர் உயிரிழந்ததாக மூத்த மலேசியா பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது இறந்த நபர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
1994 ல் இருந்து வட கொரியாவை ஆண்ட கிம் ஜோங்-இல்லின் மூத்த மகன் கிம் ஜோங்-நாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரியா தலைவரின் சகோதரர் மலேசியாவில் படுகொலை!
 Reviewed by Author
        on 
        
February 14, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 14, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
February 14, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 14, 2017
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment