சுழலில் சுருண்டது வங்கதேசம்: இந்தியா அபார வெற்றி...
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 208 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று அசத்தியுள்ளது.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஐதராபாத்தில் கடந்த 9ம் திகதி தொடங்கியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 687 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னங்சில் 388 ஓட்டங்கள் எடுத்தது, 299 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது.
459 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 250 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஐடேஜா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
208 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழத்திய இந்திய அணி ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
சுழலில் சுருண்டது வங்கதேசம்: இந்தியா அபார வெற்றி...
 
        Reviewed by Author
        on 
        
February 13, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
February 13, 2017
 
        Rating: 



No comments:
Post a Comment