கோப்பாபிளவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் உரிமைப்போராட்டங்களுக்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு முழு ஆரதவு.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிளவு, புதுக்குடியிருப்பு, காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கிராமத்தினை சேர்ந்த மக்கள், பாடசாலை மாணவர்கள் தமது காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கான தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
-இவ்விடையம் குறித்து மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளது.
-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிளவு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் மக்களின் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கிராமத்தினை சேர்ந்த மக்கள், பாடசாலை மாணவர்கள் தமது காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடந்த மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை தமது உரிமைப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் வன்னிப்பிரதேசத்தில் நடை பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அனாதைகளாகக்கப்பட்டிருக்கும் பாடசாலை சிறார்கள் தமது உரிமைகளை பறிகொடுத்த நிலையில் இன்று நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ளனர்.
இந்நிலையிலும் இவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்த வண்ணமே உள்ளார்கள்.
எனவே இவர்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு முழுமையான உரிமைகள் கிடைக்க வேண்டும் எனக்கோரி மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவானது முழுமையான ஆதரவினை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்-

Reviewed by Author
on
February 09, 2017
Rating:
Reviewed by Author
on
February 09, 2017
Rating:

No comments:
Post a Comment