அண்மைய செய்திகள்

recent
-

மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் மக்களின் காணிகள் பல'வன இலாகா வினால்'அபகரிப்பு-வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் குற்றச்சாட்டு-(படம்)

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் சார்ந்த விளை நிலங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக காலம் காலமாக பயண்படுத்தி வந்த காணிகளை 'வன இலாகா வினால்' தொடர்ச்சியாக தமது பகுதிகளாக அடையாளமிடப்பட்டு காணி அபகரிப்பு இடம் பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் சார்ந்த விளை நிலங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக காலம் காலமாக பயண்படுத்தி வந்த காணிகளை 'வன இலாகா வினால்'தொடர்ச்சியாக தமது பகுதிகளாக அடையாளமிடப்பட்டு காணி அபகரிப்பு இடம் பெற்று வருவதோடு,மீளவும் அக்காணிகளுக்கு உரிய மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல தடை விதித்து புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாகவே குஞ்சுக்குளம் கிராமத்தில் மக்களின் சுமார் 200 ஏக்கர் காணி இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் குறித்த காணிகளில் விவசாயம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் இருந்து உத்தியோகபூர்வமாக 1965 ஆம் ஆண்டில் இருந்து இவற்றை பெற்று வந்திருக்கின்றார்கள்.

இவர்களிடம் குறித்த காணிகளுக்கான அரச அனுமதிப்பத்திரம் மற்றும் காணி உறுதிகளும் காணப்படுகின்றது.
அப்படி இருந்தும் குறித்த காணிகள் வன இலாகாவிற்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டு குறித்த காணிகளுக்கு எல்லைக்கற்கள் போடப்பட்டு மக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் அரசாங்கத்தினால் அதுவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவரினால் நேரடியாக வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் கூட அவர்களின் கையில் இருந்தும் தற்போது குறித்த காணிகள் வன இலாகாவிற்கு சொந்தமானது எனவும் குறித்த காணி அனுமதிப்பத்திரங்கள் செல்லாது என்று தடைகளை விதித்து வருகின்றனர்.

இதனால் குறித்த காணிகளுக்கு உரிய மக்கள் தமது விசனத்தை தெரிவித்துள்ளதோடு மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் எனது கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த குஞ்சுக்குளம் கிராம மக்கள் உற்பட மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் வகையில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறித்த மக்களுக்கு வன இலாகாவின் செயற்பாடுகள் பாறிய தடையாக உள்ளதாக அந்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது.வடமாகாண சபையூடாக எங்களினாலும்,மத்திய அரசாங்கம் என்ற வகையில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளினாலும்,பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் குறித்த பிரச்சினை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இதற்கான தீர்வுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். குறித்த பிரச்சினை வன இலாகாவினால் மனிதாவிமானமற்ற முறையில் ஒரு அத்துமீறலாகவும் ஓர் ஆக்கிரமிப்பாகவும் காணப்படுகின்றது.

குறித்த ஆக்கிரமிப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உற்பட அனைவருக்கும் தெழிவு படுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் இருக்கின்றோம்.

மாகாண சபையூடாக இப்பிரச்சினையை கொண்டு செல்வதற்கும்,குறிப்பாக குறித்த பிரச்சினை தொடர்பில் முதலமைச்சருக்கும் தெழிவு படுத்தவுள்ளேன்.

ஏனைய மக்கள் பிரதி நிதிகளும் இணைந்து கொண்டு குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.இல்லாது விட்டால் மக்கள் போராட்டமாக மாற்றி சாத்வீக போராட்டத்தில் இறங்கி எமது மக்களுக்குறிய குறித்த காணிப்பிரச்சினையை தீர்க்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுவோம் என்பது உண்மை.என அவர் மேலும் தெரிவித்தார்







மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் மக்களின் காணிகள் பல'வன இலாகா வினால்'அபகரிப்பு-வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் குற்றச்சாட்டு-(படம்) Reviewed by NEWMANNAR on February 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.