பகுதியளவில் விடுவிப்பு அல்லது நட்டஈடு! கேப்பாப்பிலவு குறித்து கலந்துரையாடல்....
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு விமானப்படை அமைந்துள்ள நிலப்பரப்பில் பொது மக்களுக்குச் சொந்தமான காணியை பகுதியளவில் விடுவிப்பதற்கு இணக்கம் எட்டப்படும் எனவும் அவ்வாறில்லாவிடின், அந்தக் காணிகளுக்கான நட்டஈட்டினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட, நாடாளுமன்றம் மற்றும் சிவில் விவகார மேலதிகச் செயலாளர் ஏ.பி.ஆர்.ராஜபக்ஷ, மேற்படி கேப்பாப்புலவு காணி விவகாரம் தொடர்பில் மேலும் கூறியதாவது,
பிலவுக்குடியிருப்பு விமானப்படை முகாம் அமைந்துள்ள காணியானது, அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகும். அதில், ஒரு பகுதி வனஇலாகா திணைக்களத்துக்குச் சொந்தமாக இருக்கின்றது. யுத்தம் நிலவிய காலப் பகுதியில், குறித்த பகுதிக் காணிகளை, மாவீ ரர் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்குமாறு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால், மாவட்ட அரசாங்க அதிபருக்கு அதிக அழு த்தம் பிரயோகிக்கப்பட்டது.
இந்த அழுத்தம் காரணமாக அக்காணி, 2005ஆம் ஆண்டில் அரசாங்க அதிபரினால் அரசாங்கத்துக்குச் சொந்தமாக எழுதிக்கொடுக்கப்பட்டது. அவ்வாறு அரசாங்கத்துக்குச் சொந்தமாக்கப்பட்ட காணியிலேயே, விமானப் படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 40 ஏக்கர் காணி, பொது மக்களுக்குச் சொந்தமாக இருக்கின்ற தென கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 54 குடும்பங்களுக்குரிய அந்தக் காணியை, அம்மக்களிடமே பகுதியளவில் கையளிப்பதற்கு அல்லது நட்டஈடு வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. மாவட்ட அரசாங்க அதிபரும், அதனையே வலியுறுத்தியுள்ளார்.
எனவே, வெகு விரைவில் அக்காணி, பொது மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படும். அல்லது, அக் காணிக்கான நட்டஈடு வழங்கப்படும். காணி பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில், அரசாங்க த்துக்கும் வனஇலாகாவுக்கும் சொந்தமாக எஞ்சியுள்ள காணியில் விமானப்படை முகாம் அமைந்திருக்கும் என்று அவர் மேலும் கூறி னார்.
பகுதியளவில் விடுவிப்பு அல்லது நட்டஈடு! கேப்பாப்பிலவு குறித்து கலந்துரையாடல்....
Reviewed by Author
on
February 27, 2017
Rating:

No comments:
Post a Comment