மக்களின் நிலமீட்புப் போராட்டம் பொது அமைப்புகளை அழைக்கிறது தமிழ் மக்கள் பேரவை....
தமதுசொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் நடத்தி வரும் போரட்டத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வழங்கக்கூடிய ஆதரவு பற்றி ஆராயும் பொருட்டு அனைத்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று நாளை மறுதினம் 28-ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பலாலி வீதி கோண்டாவிலில் அமைந்துள்ள சேவாலங்கா நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான அழைப்பை தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ளது.
கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் நில மீட்புக்கான தொடர் போராட்டம் நீடித்து வரும் நிலையில், நேற்றையதினம் அவசரமாகக் கூடிய தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு அனைத்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வழங்கக்கூடிய ஆதரவு பற்றி ஆராய்வதென முடிவெடுக்கப்பட்டது.
இதேவேளை இக் கலந்துரையாடலில் அனைத்துப் பொது அமைப்புக்களையும் கலந்து கொள்ளுமாறும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
மக்களின் நிலமீட்புப் போராட்டம் பொது அமைப்புகளை அழைக்கிறது தமிழ் மக்கள் பேரவை....
Reviewed by Author
on
February 27, 2017
Rating:

No comments:
Post a Comment