மன்னார் முருங்கனில் கேப்பாப்புலவு காணி மீட்பு போராட்;டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன பேரணி.
கேப்பாப்புலவு காணி மீட்பு போராட்;டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்களின் காணி அபகரிப்புக்கும் எதிராகவும் மன்னார் மக்களின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி இன்று திங்கட்கிழமை(27) காலை முருங்கன் பேரூந்து நிலையத்தின் முன் இடம் பெற்றது.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் உள்ள முருங்கன் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் இன்று திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 2 மணிவரை குறித்த கண்டனப் பேரணி இடம் பெற்றது.
இதன் போது கேப்பாப்புலவு காணி மீட்பு போராட்;டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்களின் காணி அபகரிப்புக்கும் எதிராக கண்டன பேரணி இடம் பெற்றது.
-குறித்த கண்டன பேரணியில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
-குறிப்பாக நல்லாட்சி அரசே நாங்களும் இலங்கையரே நாசம் செய்யாதே,ஆக்கிரமிப்பாளர்கலே எமது மண்ணை எம்மிடம் தாருங்கள்,எம் உறவுகளின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றும் வரை உறக்கம் கொள்ள மாட்டோம் என பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
-மக்களின் எதிர்ப்பு போராட்டத்தில் அருட் தந்தையர்கள்,இந்து மத குருக்கள்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனிமார்க் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜரும் உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.மாலை 2 மணியளவில் குறித்த கண்டனப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
February 27, 2017
Rating:

No comments:
Post a Comment