இவங்கா டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய புகைப்படம்: கோபத்தில் அமெரிக்க மக்கள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அதிகாரப்பூர்வ இருக்கையில் அவரது மகள் இவங்கா டிரம்ப் அமர்ந்திருந்து புகைப்படத்திற்கு முகம் காட்டியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், அவர் தொடர்பான சர்ச்சைக்குரிய சம்பவங்கள் எதாவது ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்தவகையில், நேற்று கனட பிரதமர் Justin Trudeau அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி டிரம்புடன் இரு நாடுகளுக்கிடையே இருக்கும் நல்லுறவு குறித்து விவாதித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இவங்கா டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பெண்களின் முக்கியத்துவம் பற்றி இரண்டு உலக நாடுகளின் தலைவர்களுடன் விவாதித்துக் கொண்டதாக பதிவேற்றம் செய்துள்ளார்.இதற்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும், ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்து வருகிறது.
இவங்கா வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இருக்கையில் அமர்ந்திருந்தது பொதுமக்களைடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் சமூகவலைத்தளங்களில் பலர் அது எப்படி இவர் ஜனாதிபதி அமரவேண்டிய இருக்கையில் அமரலாம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் தாங்கள் ஒன்றும் பெண் ஜனாதிபதியை தேர்ந்தேடுக்கவில்லை, அதற்கான நேரம் வரும் போது அவர்கள் அமரட்டும் என்று சிலர் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்க மக்கள் பலரும் தங்களுடைய ஆதங்கத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு புறமும், கனட பிரதமர் Justin Trudeau ஒரு புறமும், அவர்கள் இருவருக்கும் இடையில் இவங்கா டிர்ம்ப் அமர்ந்திருப்பார். இந்த புகைப்படம் ஓவலில் உள்ள டிரம்ப் அலுவலகத்தில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இவங்கா டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய புகைப்படம்: கோபத்தில் அமெரிக்க மக்கள்
Reviewed by Author
on
February 15, 2017
Rating:

No comments:
Post a Comment