மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு கட்சி பேதம் இன்றி உதவிளை வழங்குவதே எமது நோக்கம்- சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட பிரதான அமைப்பாளர் என்.எம்.எம்.பாரிஸ்
மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற 5 ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கட்சி பேதங்களின்றி உதவிகளை வழங்குவதே எமது முதல் கட்ட இலக்கு என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட பிரதான அமைப்பாளர் என்.எம்.எம்.பாரிஸ் தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (14) மாலை மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சின்ன வலயன்கட்டு கிராமத்தில் இடம் பெற்றது.
இதன் போது முதல் கட்டமாக குறித்த கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த பின் உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் 5 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வறிய குடும்பங்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவிகளை மேற்கொள்வதே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதல் திட்டமாக உள்ளது.முதலாவது ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (14) மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வலயன்கட்டு கிராமம் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமம் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்த மக்களை யாரும் கண்டு கொள்வதில்லை.நாங்கள் முன் மாதிரியாக நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கிராமத்தை முதல் கட்டமாக தெரிவு செய்துள்ளோம்.எதிர்வரும் காலத்தில் வலயன்கட்டு கிராமம் விழிப்பான கிராமாக மிளிரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எதிர்வரும் காலங்களில் உங்களை தேடி பலர் வருகை தர உள்ளனர்.எங்களுடைய திட்டத்தின் கீழ் வறுமையில் உள்ள அனைவருக்கும் உதவிகள் வழங்கப்பட உள்ளது. வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு கட்சி பேதங்களை கடந்து நாங்கள் உதவிகளை முன்னெடுக்க உள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
January 14, 2026
Rating:






.jpg)

No comments:
Post a Comment