வவுனியா ஏ9 வீதியில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது
வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா - ஏ9 வீதியில் வைத்தியசாலை சந்தியடியில் உள்ள டயர் கடையில் ஒன்றில் வைத்தே இவர்கள் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த கடையில் இருந்து 930 மில்லிகிராம், 400 மில்லிகிராம், மற்றும் 790 மில்லி கிராம் கேரளா கஞ்சா சரைகளில் சுற்றப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பெண் உட்பட மூவரை கைது செய்துள்ளதாகவும் வவுனியா குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர், இவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
March 14, 2017
Rating:

No comments:
Post a Comment