மன்னாரில் 1750 கடல் அட்டைகள் மீட்பு: 36 பேர் கைது
மன்னார், இலுப்பைக்கடவை கடற்பகுதியில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த 36 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
இலங்கை கடற்படையினர், மன்னாரின் இலுப்பைக்கடவை கடல் பகுதியில் நேற்று முன்தினம் (01) இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 நபர்களையும், 1750 கடல் அட்டைகளுடன், 6 டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.இலங்கை செய்திகள்
அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான புவனேக, மன்னார், இலுப்பைக்கடவை கடற்பகுதியை உள்ளடக்கி நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ஆறு (06) சந்தேகத்திற்கிடமான படகுகள் ஆய்வு செய்யப்பட்டன. சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 நபர்கள், 1750 கடல் அட்டைகள், ஆறு (06) சபடகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள், இலுப்பைக்கடவை மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 22 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னாரில் உள்ள பூநகரி மீன்வள ஆய்வகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Reviewed by Vijithan
on
April 03, 2026
Rating:


No comments:
Post a Comment