மன்னார் மதவாச்சி பிரதான வீதி தள்ளாடி சந்தியில் விபத்து-சிறுவன் ஒருவர் உற்பட இருவர் அதிஸ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்-Photos
மன்னார் மதவாச்சி பிரதான வீதி தள்ளாடி சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை இடம் பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உற்பட இருவர் எவ்வித காயங்களும் இன்றி அதிஸ்ர வசமாக உயிர்தப்பியுள்ளனர்.
எனினும் விபத்திற்கு உள்ளான பட்டா ரக வாகனம் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த பட்டா ரக வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் மது போதையில் சென்றமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
-மன்னாரில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த நபர் தான் வாடகைக்கு பெற்றுக்கொண்ட பட்டா ரக வாகனத்தில் 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவரை ஏற்றிக்கொண்டு மன்னாரில் இருந்து வங்காலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி தள்ளாடி இராணுவ முhகமிற்கு சற்று தொலையில் கடலினுள் பாய்ந்து விபத்திற்கு உள்ளாகியது.
-இதன் போது குறித்த வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் மற்றும் பயணித்த சிறுவன் ஆகியோர் எவ்வித காயங்களும் இன்றி அதிஸ்ரவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
-எனினும் குறித்த வாகனம் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த பட்டா ரக வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் மது போதையில் காணப்பட்டதை அவதானித்த பொலிஸார் குறித்த நபரை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதன் காரணமாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.(படம்)
(5-03-2017)

Reviewed by NEWMANNAR
on
March 06, 2017
Rating:

No comments:
Post a Comment