இலங்கையில் கணினி அறிவுமட்டம் உயர்வு! கொழும்பு முன்னிலை - முல்லைத்தீவு பின்னடைவு...
கடந்த 10 வருடத்தில் இலங்கையில் வீட்டு கணினி பாவனை நூற்றுக்கு மூன்று வீதத்திலும், கணினி அறிவுமட்டம் நூற்றுக்கு 11 வீதத்தாலும் அதிகரித்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வீடுகளின் கணினி பாவனை ஆரம்பித்து தற்போது வரையில் 15 வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியே நிறைவடைந்துள்ளது.
இலங்கை வீட்டு பாவனைக்காக நூற்றுக்கு 67 வீதமானோர் தமது முதலாவது கணினியை 2010 - 2014ஆம் ஆண்டு காலப்பகுதியினுள் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இந்த வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரிவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வுக்கு அமைய இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இலங்கையில் நூற்றுக்கு 24.6 வீதமானோர் குறைந்த பட்சம் ஒரு கணினியையேனும் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் 20 - 24 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிக கணினி அறிவு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது நூற்றுக்கு 69.1 வீதமாகும். 15 - 19 வயதிற்கு இடைப்பட்டோரிடம் 57.2 வீத கணினி அறிவு உள்ளது. இந்நிலையில், பெண்களின் கணினி அறிவை விடவும் ஆண்களின் கணினி அறிவு அதிகம் என தெரியவந்துள்ளது.
50 வயதை கடந்தவர்களில் ஆண்களுக்கே அதிக கணினி அறிவு உள்ள போதிலும், 50 வயதுக்கு அதிகமான பெண்களிடம் விரைவில் கணினியை கற்கும் அறிவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மாகாண ரீதியில் பார்க்கும் போது மேல் மாகாணத்தில் அதிக கல்வியறிவு உள்ளது. அதில் கொழும்பு மாவட்டத்தில் நூற்றுக்கு 47.1 வீதம் வரை அதிகரித்துள்ளது.
இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நூற்றுக்கு 38 வீதம் கொழும்பு மாவட்டத்தில் காணப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் கணினியறிவு நூற்றுக்கு 30 வீதம் காணப்படுகின்ற நிலையில் அதிக கணினியறிவு குறைந்த மாவட்டமாக முல்லைத்தீவு காணப்படுகின்றது. அது நூற்றுக்கு 8.9 வீதமாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கணினி அறிவுமட்டம் உயர்வு! கொழும்பு முன்னிலை - முல்லைத்தீவு பின்னடைவு...
Reviewed by Author
on
March 09, 2017
Rating:
Reviewed by Author
on
March 09, 2017
Rating:


No comments:
Post a Comment