அண்மைய செய்திகள்

recent
-

அமைதி போராட்டம்-ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு மகஜர் அனுப்பி வைப்பு-(படம்)


மன்னார் மாவட்டத்தில் பல்வேறு விதமாக பாதீக்கப்பட்ட மக்கள் இன்று(16) வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்டச்செயலகத்திற்கு முன் ஒன்று கூடி ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் மகஜர் ஒன்றை கையளிக்கும் வகையில் வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசையிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நில ஆக்கிரமிப்பினால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பாதீக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள்,என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு குறித்த மகஜரை கையளித்தனர்.

மன்னார் மாட்டச்செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போன தமது உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறும்,சிலர் காணிகளையும்,மக்களின் நிலங்களையும் , சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் அமைதியான முறையில் கவணயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

-பின்னார் மன்னார் மறைமாவட்ட ஆயரின் பிரதி நிதியாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வாசித்து காட்டிய பின் வைபவ ரீதியாக மகஜரை கையளித்தனர்.

ஐகயளிக்கப்பட்ட மகஜரை ஐ.நா மனித உரிமைகள் தொடரின் 34 ஆவது அமர்வு தற்போது இடம் பெற்று வருகின்ற நிலையில் உரிய தரப்பினரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

-இதன் போது மகஜரை பெற்றுக்கொண்ட மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்,

ஆயர் சார்பாக நான் உங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை பெற்றுக்கொண்டுள்ளேன்.

-தற்போது இடம் பெற்று வருகின்ற ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சம்மந்தப்பட்டவர்களுக்க குறித்த மகஜரை உடனடியாக அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றோம்.

-உங்களுடைய நீதியான போராட்டம் இது. இங்குள்ளவர்களை காண்கின்ற போது மிகவும் வேதனையை ஏற்படுத்துகின்றது.

எங்களுடைய உறவுகள், கடத்தப்பட்டு, காணமால் ஆக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டும் உள்ளனர்.

-எனவே பல்வேறு வகையில் பாதீக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

-நீங்கள் நடத்துகின்ற போராட்டம் நிச்சையமாக வெற்றியடையும்.











அமைதி போராட்டம்-ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு மகஜர் அனுப்பி வைப்பு-(படம்) Reviewed by NEWMANNAR on March 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.