அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மீது அணுகுண்டு தாக்குதல் நடந்தால்?
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம் வைரலாகியுள்ளது.
உலக நாடுகள் பலவும் போர் சூழலை எதிர்கொள்ள போராடி வருகின்றது. வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அண்டை நாடுகளை பதற்றமான சூழலிலிலேயே வைத்துள்ளது.
இதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் நாடு சமீபத்தில் போர் ஒத்திகை ஒன்றை பொதுமக்களுக்கு நடத்திக் காட்டியது.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார் நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்டால் அரசும் பொதுமக்களும் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு திட்டத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று வெளியிட்டுள்ளது.
குறித்த திட்டத்தை வடிவமைப்பதற்காக 450,000 டொலர்கள் செலவு செய்து 3 முழு ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று. மட்டுமின்றி இதற்கென 2 கோடி உருவகங்களை தத்ரூபமாக கணணியில் உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு உருவகவும் தனிமனிதனை குறிப்பதாகும்.
மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் உள்ளிட்ட தகவல்களை அமெரிக்கா முழுவதில் இருந்து திரட்டி இந்த விசேட திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளனர்.
முக்கிய கட்டமாக, அணுகுண்டு மாதிரியாக ஹிரோஷிமா நாகசாக்கியில் வீசப்பட்ட அதே அளவு கொண்ட அணுகுண்டை இந்த திட்டத்திற்காகவும் வடிவமைத்துள்ளனர்.
பெரும்பாலான உருவங்களுக்கு குறித்த தாக்குதல் நேர்ந்தால் தப்பித்துக்கொள்வது எவ்வாறு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, உணவு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எவ்வாறு கொண்டு சேர்ப்பது, நண்பர்கள் உறவினர்களிடம் எவ்வாறு தகவலை பகிர்ந்து கொள்வது என மிக நுணுக்கமாக ஆராய்ந்து குறித்த திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி அனுகுண்டு தாக்குதல் நடந்தால் நியூயார்க் நகரத்தில் இருந்து எவ்வாறு தப்பிச்செல்வது, அதற்கான போக்குவரத்து வசதிகளை எவ்வாறு உருவாக்குவது என மிகவும் திட்டமிட்டு வடிவமைத்து வருவதாக விஞ்ஞானிகள் குழுவில் உறுப்பினர்களான வில்லியம்ஸ் மற்றும் கென்னடி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தற்போது 3 ஆண்டுகளுக்கான நிதி உதவி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது என கூறும் விஞ்ஞானிகள் இந்த திட்டம் முழுமை அடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மீது அணுகுண்டு தாக்குதல் நடந்தால்?
 
        Reviewed by Author
        on 
        
March 20, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
March 20, 2017
 
        Rating: 


No comments:
Post a Comment