வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஷ்டிப்பு
வவுனியாவில் நகரவரியிறுப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் விருட்சம் என்பவற்றின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் குருபூசை தினம் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு வைத்தியசாலை சுற்றுவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நினைவுத் தூபியில் இன்று காலை நடைபெற்றுள்ளது.
கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தலைவர் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜேர்மன் நாட்டின் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் வைத்தியர்கள், தாதியர்கள் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்திருந்தனர்.
இதேவேளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், முன்னாள் நகர உப பிதா சந்திரகுலசிங்கம், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை மாணவ, மாணவிகள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு மலர் தூவி குருபூசை தினத்தினை அனுஷ்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
March 13, 2017
Rating:

No comments:
Post a Comment