குறைகேட்க வந்தவர் கேளாமல் போனதேனோ!
ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் என்ற திட் டத்தின் கீழ் குறைகேள் அலுவலகத்தை திறந்து வைக்க வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல்போனவர்களின் உறவினர்களைச் சந்திக்காமல் அவர்களின் துன்பத்தைக் கேட்காமல் சென்றமை மிகுந்த வேதனை தருவதாகும்.
குறைகேள் அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்காக காணாமல்போனவர்களின் உறவுகளும் வேலையற்ற பட்டதாரிகளும் யாழ். மாவட்ட செயலகத்துக்கு அண்மையாக இருக்கக்கூடிய வட மாகாண ஆளுநரின் அலுவலகம் முன்பாக காத்திருந்தனர்.
மேற்படி இருதரப்பினரும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் எதுவும் நடக்கவில்லை.
காணாமல்போன தங்கள் பிள்ளைகள் எங்கே? அவர்களுக்கு நடந்தது என்ன? எங்கள் பிள்ளைகளைத் தேடித் தாருங்கள் என்று அழுது புலம்பி மண்ணில் விழுந்து தலையில் அடித்து அழுகுரல் எழுப்பிய தாய்மாரை ஒரு ஐந்து நிமிடமேனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்திருக்க வேண்டும்.
அவருடைய ஆட்சியில் காணாமல்போதல் நடக்கவில்லையாயினும் தற்போதைய ஆட்சி அவருடையதாகையால் பொறுப்புக் கூறுதல் என்பதிலிருந்து அவர் விலக முடியாதென்பது மறுதலிப்பற்ற உண்மை.
நல்லாட்சி ஏற்பட்டது. எனவே இனி தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே சர்வதேச நாடுகள் இலங்கை மீதான அழுத்தத்தை ஒத்தி வைத்தன.
ஆனால் நல்லாட்சியும் முன்னைய கொடும் ஆட்சியும் பெயரால் வேறுபட்டதாயினும் செயலால் ஒன்றென்பது போல நடந்து கொள்வது தர்மம் அன்று.
வன்னி பெரு நிலப்பரப்பில் நடந்த யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பின்னருமாக தமிழ் இளைஞர்கள் பலர் காணாமல்போயுள்ளனர்.
இலங்கை இன விவகாரத்தில் காணாமல் போனவர்களின் விவகாரம் சாதாரணமானதல்ல.
தங்கள் பிள்ளைகள் காணாமல்போனதால் எத்தனையோ தாய்மார் மனம் பேதலித்தவர்களாக - வாழ்க்கை வெறுத்தவர்களாக ஆகிவிட்டனர்.
இவர்களின் துயரம் சாதாரணமானதல்ல. எனவே இதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும். இது விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எனினும் அது நடக்கவில்லை. இருந்தும் ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் என்ற செயற்றிட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்க வந்த ஜனாதிபதி மைத்திரியிடம் தங்கள் மனக் குறையை - பெரும் குறையை ஜனாதிபதியிடம் தெரிவிக்கக் காத்திருந்தவர்களைச் சந்திக்காமல் செல்வதென்பது எந்தவகையிலும் நியாயமாகாது.
அவ்வாறு குறை கேட்காமல் ஜனாதிபதி சென்றார் என்றால் அவரால் திறந்து வைக்கப்பட்ட அலுவலகத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படமாட்டாது என்பதே உண்மை.
ஆக, இதோ! குறைகேள் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளோம். அதில் மக்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து தீர்வு காண முடியும் என்றவாறான ஒரு தகவலை வெளிநாடுகளுக்குத் தெரியப்படுத்துகின்ற ஏற்பாடே இது என்று கூறிக்கொள்ளலாம்.
வலம்புரி

Reviewed by NEWMANNAR
on
March 05, 2017
Rating:

No comments:
Post a Comment