ஜக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான புதிய அதிகார சபைக்கான நிருவாகிகள் தெரிவு.
ஜக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான புதிய அதிகார சபைக்கான நிருவாகிகளை கட்சியின் தலைமையகம் தெரிவு செய்துள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் வழிகாட்டுதலிலும், அவரின் இணைப்புச் செயலாளர் பிறேம்லஸ் கொஸ்ராவின் நெறிப்படுத்துதலிலும், குறித்த புதிய நிருவாகிகள் ஜக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தினால்; தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் ஜக்கிய தேசிய கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக ஜக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்ட முகாமையாளராக ஏ.சமீயூ முகம்மது பஸ்மியும், மாவட்ட நீதி விவகாரச்செயலாளராக சட்டத்தரணி எம்.ஏ. முகம்மது முபாறக்கும்,மாவட்ட அத்தியாவசிய சேவைகளின் செயலாளராக ஏ.பி. முகம்மது ஹஸ்மீனும், மாவட்ட இளைஞர் விவகார செயலாளராக கிரேசியன் பெர்ணான்டஸ் கூஞ்சாவும் மாவட்டகிளை அமைப்புக்களின் இணைப்புச் செயலாளராக தேவசகாயம் தவசீலனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட மகளீர் விவகார செயலாளராக பாத்திமா பஸ்னாஸ், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பு செயலாளராக கிப்பொலிற் கத்தறின் வயலட் குரூஸ்,மாவட்ட பிரச்சாரச் செயலாளராக ரகுநாதன் வதனா உற்பட மாவட்ட தொழிற்சங்க செயலாளராக விக்டர் ஜெபநேசன் பிரதீபன்,மாவட்ட ஊடக செயலாளராக தேவசகாயம் ரஞ்சித் குமார் சோசை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் வாக்காளர் விவகாரங்கள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான மாவட்ட இணைப்பாளராக எம்.எம்.முகம்மட் ஜெசின்;, கத்தோலிக்க விவகாரங்களின் மாவட்டச் செயலாளராக சனிக்கிலாஸ் மீயேஸ்;, முஸ்லிம் விவகாரங்களுக்குரிய மாவட்டச் செயலாளராக அப்துல் காசீம் றஹ்;மத்துல்லா, இந்து மத விவகாரங்களுக்குரிய மாவட்டச் செயலாளராக குப்புச்சாமி ஆறுமுகம் ஆகியோர்களும் தெரிவாகியுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜக்கிய தேசியகட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்காவினால் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான புதிய அதிகார சபைக்கான நிருவாகிகள் தெரிவு.
Reviewed by NEWMANNAR
on
March 03, 2017
Rating:

No comments:
Post a Comment