மன்னார் மாவட்டத்தில் வங்காலை கிராமத்தில் சந்தேகத்திற்கு உரிய மரணம் ஒன்று 12-04-2017 இடம்பெற்றுள்ளது.
வங்காலை பஸ்ரிபுரியில் வறிய குடும்பத்தை சேர்ந்த 3பிள்ளைகளின் தந்தையான நாகரெட்ணம் நேசரெட்ணம் (சுதா) என்பவர் இந்திய மிதிவெடி அகற்றும் குழுவான HORIZON எனும் குழுவினரின் அனுசரணையுடன் குவைத் நாட்டிற்கு சுற்றுலாவிசாவில் வேலைக்கு அழைத்து சென்று தற்போது சடலமாக நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்காக காரணம் என்ன வென்று வினவியபோது அவர் இரவு தூங்கி காலை பார்த்த வேளை காது மூக்கு வாய் போன்றவற்றால் இரத்தம் கசிந்தவாறு இறந்த நிலையில் இருந்ததாகவும் இதற்கான காரணம் மாரடைப்பு என்று கூறியுள்ளார்.
இந்த மரணம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் நிலவுகிறது. காரணம் சுதா என்பவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குவைத் நாட்டில் இவருடன் வேலைக்கு சென்றவர்களிடம் இது தொடர்பாக வினவியபோது அவர்கள் இதுதொடர்பாக சரியான எந்த தகவலையும் தர தயக்கம் காட்டுவதை உணர முடிகின்றது. மேலும்
மேலும் வருகின்ற 25-04-2017 அன்றைய தினம் இதே வேலைக்காக குவைத் செல்லவிருந்த இன்னும் சில நபர்கள் தற்போது இடம் பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் இது குறித்து எந்த தகவலும் ஊடகங்களில் வெளிடாதது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் நிலவுகிறது. காரணம் சுதா என்பவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குவைத் நாட்டில் இவருடன் வேலைக்கு சென்றவர்களிடம் இது தொடர்பாக வினவியபோது அவர்கள் இதுதொடர்பாக சரியான எந்த தகவலையும் தர தயக்கம் காட்டுவதை உணர முடிகின்றது. மேலும்
மேலும் வருகின்ற 25-04-2017 அன்றைய தினம் இதே வேலைக்காக குவைத் செல்லவிருந்த இன்னும் சில நபர்கள் தற்போது இடம் பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் வங்காலை கிராமத்தில் சந்தேகத்திற்கு உரிய மரணம் ஒன்று 12-04-2017 இடம்பெற்றுள்ளது.
Reviewed by NEWMANNAR
on
April 16, 2017
Rating:

No comments:
Post a Comment