மன்னார் பேசாலையில் 150 வருடபாரியம்பரிய உடக்கு பாஸ் இருதினங்கள் மிகவும் சிறப்பாக ....படங்கள் இணைப்பு
இலங்கையிலே தனித்துவமான மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கு மக்களால் பேசாலையில் 150 வருடத்துக்கு மேலான பாரியம்பரிய உடக்கு பாஸ் வியாழன், வெள்ளி (06-07.04.2017) ஆகிய இரு தினங்கள் காண்பித்த நிகழ்வில்
.பேசாலை உடக்கு பாஸ் முதல் நாள் நிகழ்வு-06-04-2017
மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கு மக்களால் பேசாலையில் பாரியம்பரிய உடக்கு பாஸ் வியாழன், வெள்ளி (06-07.04.2017) ஆகிய இரு தினங்கள் காண்பிக்கும் முதல்நாள் நிகழ்வில்
கலந்து கொள்ள வரும் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆண்டகை கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மற்றும் குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார் நிகழ்வை செப வழிபாட்டுடன் பங்கு தந்தை உதவி பங்கு தந்தை அருட்பணியாளர்கள் அலெக்ஸ்சாண்டர் பெனோ, பெயிலன் அடிகளார்கள் ஆசிர்வதித்து ஆரம்பித்து வைத்தனர்
பேசாலை சரித்திரம் வாய்ந்த உடக்கு பாஸ் இரண்டாம் நாள் நிகழ்வு-07-04-2017
இரண்டாம் நாளான வெள்ளிக் கிழமை (07.04.2017) கிறிஸ்து இயேசுவின் பாடு, மரணம் ஆகியவற்றின் நான்கு பிரசங்க நிகழ்வுகள் இடம்பெற்றபோது பங்கு தந்தை அருட்பணி அலெக்சாண்டர் பெனோ சில்வா அடிகளார் தலைமையில் இடம்பெற்றது. இவற்றை மடு ஆலய பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளாரும், அமல மரி தியாகிகளின் சபை மறை போதகரான அருட்பணி பி.ஜெறோம் லெம்பேட் அடிகளாரும் இவ் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இலங்கையிலே தனித்துவமான பேசாலையில் கடந்த இரு தினங்கள் நடைபெற்ற 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த உடக்கு பாஸை பதினைந்து வருடங்களுக்கு பின் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கண்டு களித்தகாட்டிநிற்கின்றது தோடு .மன்னார் திருச்சபையிலே பேசாலை கத்தோலிக்க மக்கள் விசுவாசத்தில் தனித்துவம் கொண்டவர்களாக திகழ்கின்றார்கள் இவ்பாரிய நிகழ்வானது சீரிய பண்பு விசுவாசம் இறைநம்பிக்கை கிறிஸ்த்தவத்தின் புனித்த்தன்மை பறைசாற்றி நிற்கின்றது.
தொகுப்பு- வை-கஜேந்திரன் -
மன்னார் பேசாலையில் 150 வருடபாரியம்பரிய உடக்கு பாஸ் இருதினங்கள் மிகவும் சிறப்பாக ....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
April 10, 2017
Rating:

No comments:
Post a Comment