அண்மைய செய்திகள்

recent
-

மறிச்சுக்கட்டி பகுதியில் தொடர்ந்தும் முஸ்ஸீம் மக்கள் போராட்டம்.(படம்)

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு கண்டனம் தெரிவித்து மறிச்சுக்கட்டி பகுதியில் தொடர்ந்தும் முஸ்ஸீம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையம் குறித்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான நவவி மறிச்சுக்கட்டி பகுதிக்கு விஜயம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை சந்தித்துள்ளனர்.

இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் , மாந்தை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சனூஸ் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இதன் போது ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு கண்டனம் தெரிவித்து மறிச்சுக்கட்டி மக்கள் தொடர்சியா 14 ஆவது நாளாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் குறித்து தெழிவு படுத்தினர்.

மேலும் வர்த்தமானி அறிவித்த லை ஜனாதிபதி இரத்து செய்யும் வரையில் இப் போராட்டம் தொடரும் என்றும் இதற்காக அரசியல்வாதிகள் அனைவரும் கட்சிபேதம் இன்றி தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மறிச்சுக்கட்டி பகுதியில் தொடர்ந்தும் முஸ்ஸீம் மக்கள் போராட்டம்.(படம்) Reviewed by NEWMANNAR on April 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.