அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவரின் சாதனைப்பயணம் மன்னாரை வந்தடைந்தது.(படம்)

இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் இன,மத,மொழி பாகு பாடின்றி போதுமான அளவு 'ஓய்வூதியக் கொடுப்பனவு' வழங்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் ஆரம்பித்த சாதனைப்பயணம் இன்று திங்கட்கிழமை 3 ஆவது நாள் பயணமாக மன்னாரை வந்தடைந்தது.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் குறித்த கோரிக்கையினை முன் வைத்து இலங்கையை சைக்கிளில் சுற்றி வலம் வரும் 1515 கிலோ மீற்றர் சாதனைப்பயணத்தை கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நகரில் ஆரம்பித்தார்.

தனது பயணத்தை வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று யாழ்ப்பாணத்தில் இருந்து சங்குப்பிட்டி ஊடாக பூனகரியை வந்தடைந்து அங்கிருந்து முழங்காவில் சென்று அங்கிருந்து இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் சாதனைப் பயணம் மன்னாரை வந்தடைந்தது.

-மன்னார் பொது வைத்தியசாலை வீதியை இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் வந்தடைந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவரை மன்னார் இளைஞர்கள் ஒன்றிணைந்து பட்டாசு கொழுத்தி பூ கொத்தை வழங்கி வரவேற்றனர்.

-பின்னர் சாதனை பயணத்தை மேற்கொண்டு மன்னார் வந்த தர்மலிங்கம் பிரதாபனுக்கு குளிர் பாணத்தையும் வழங்கி வைத்தனர்.
-பின்னர் மன்னாரில் இருந்து மீண்டும் தனது பயணத்தை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு கிராமத்தை நோக்கி ஆரம்பித்துள்ளார்.

-அங்கிருந்து எழுவாங்குளம் புத்தளம் வீதியூடாக கொழும்பை சென்றடைய உள்ளதாக தர்மலிங்கம் பிரதாபன் தெரிவித்தார்.

-மன்னார் வந்த தன்னை மன்னார் இளைஞர்கள் மற்றும் நண்பர்கள் பட்டாசு கொழுத்தி தன்னை வரவேற்றுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும்,மன்னார் மக்கள் வழங்கிய வழவேற்பு தனது பயணத்திற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த தர்மலிங்கம் பிரதாபன் தனது சாதனைப்பயணம் எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மக்களின் ஆதரவை அதிகலவில் எதிர்பார்ப்பதாகவும் சாதனைப்பயணத்தை ஆரம்பித்த தர்மலிங்கம் பிரதாபன் மேலும் தெரிவித்தார்.



-மன்னார் நிருபர்-
(10-04-2017)









வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவரின் சாதனைப்பயணம் மன்னாரை வந்தடைந்தது.(படம்) Reviewed by NEWMANNAR on April 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.