முகாம் வாழ்வை முடித்து வைத்த லைக்காவிற்கு நன்றி’ வவுனியா அரச அதிபர்
வவுனியா மாவட்ட அகதிகள் முகாமிற்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்குள்ள அகதிகளுக்கு நிரந்த வீடுகளை அமைத்துக் கொடுத்த லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனத்திற்கு, வவுனியா அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார நன்றி தெரிவித்துள்ளார்.சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 150 வீடுகளைக் கொண்ட லைக்கா கிராமத்தை கைளிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு, லைக்காக ஞானம் அறக்கட்டளையின் இந்த அளப்பரிய சேவையினை பாராட்டி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வவுனியா மாவட்டத்தில் இறுதியாக பூந்தோட்டம் அகதிகள் முகாமே இருந்ததாகவும், அங்குள்ள மக்களுக்கும் தற்போது லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிரந்த வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.இந்த மகத்தான நிழ்வுடன், வுனியா மாவட்டத்தில் அகதிகள் முகாம் முற்றுமுழுதாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக நல்லுள்ளம் கொண்டு உதவி செய்த லைக்காவின் ஞானம் அறக்கட்டளை, அதன் தலைவர் மற்றும் ஸ்தாபகர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 வீடுகளைக் கொண்ட லைக்கா கிராமத்தை, லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி. ஞானாம்பிகை அல்லிராஜா, நிறுவுனர் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோர் பயனாளிகளிடம் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
![]() |
Add caption |
முகாம் வாழ்வை முடித்து வைத்த லைக்காவிற்கு நன்றி’ வவுனியா அரச அதிபர்
Reviewed by NEWMANNAR
on
April 11, 2017
Rating:

No comments:
Post a Comment