அண்மைய செய்திகள்

  
-

நானாட்டான் எரிபொருள் நிறப்பும் நிலையத்தின் அவல நிலை-மக்கள் பாதிப்பு-(படம்)

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச்ச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நானாட்டான் எரிபொருள் விற்பனை நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துளள்னர்.

குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் டீசல்,பெற்றோல்,மண் எண்ணை போன்ற எரிபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற போதும் குறித்த 3 எரிபொருட்களினதும் இயந்திரம் ஒரு மாதங்களுக்கு மேலாக பாதுகாப்பற்ற முறையில் கற்களுக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்களுக்கு பெற்றோல் நிறப்புகின்ற போது வாடிக்கையாளர்கள் மீது பெற்றோல் சீரிப்பாய்கின்ற நிலை தொடர்ச்சியாக காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

முழுமையாக பாதுகாப்பற்ற நிலையில் குறித்த எரிபொருள் நிறப்பும் நிலையம் காணப்படுவதாகவும்,காலை 7 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை குறித்த எரிபொருள் நிறப்பும் நிலையம் தனது சேவையை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் இரவு 8.40 மணிக்கே குறித்த எரிபொருள் நிறப்பும் நிலையம் பூட்டப்படுவதாகவும்,இதனால் வடிக்கையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

-எனவே உரிய அதிகாரிகள் குறித்த எரிபொருள் நிறப்பும் நிலையத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களுக்கு சிறந்த சேவையை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நானாட்டான் பிரதேச மக்களும்,நுகர்வோரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



-மன்னார் நிருபர்-
-10-4-2017









-
நானாட்டான் எரிபொருள் நிறப்பும் நிலையத்தின் அவல நிலை-மக்கள் பாதிப்பு-(படம்) Reviewed by NEWMANNAR on April 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.