வவுனியாவில் மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி-Photo
வவுனியாவில் 42ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.
குறித்த பேரணி(06 04 2017 ) வவுனியா மாவட்ட இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட வவுனியா இளைஞர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தமது பேரணியை முன்னெடுத்தனர்.
பின்னர் மன்னார் வீதி வழியாக மணிக்கூட்டு கோபுர சந்தியை வந்தடைந்து, அங்கிருந்து பசார் வீதி வழியாக வவுனியா கண்டி வீதியில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இடத்திற்கு வருகை தந்திருந்தனர்அதன் பின்னர் அவ்விடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் போன்ற கோசங்களுடன் தீர்க்கமான பதிலை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியிருந்தனர்.
வவுனியாவில் மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி-Photo
Reviewed by NEWMANNAR
on
April 08, 2017
Rating:

No comments:
Post a Comment