உலகின் மிகப்பெரிய கடல் பாலம் விரைவில் திறப்பு...
ஹாங்காங்கில் கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் வாகன போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்குமாறு 50கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதற்காக 3 இலட்சம் சதுர மீட்ட பரப்பளவில் பாறைகள் மற்றும் மண்ணால் நிரப்பப்பட்டு இரண்டு தீவுகள் உருவாக்கப்பட்டு அதில் 59 இரும்பு தூண்கள் நடப்பட்டு இப்பாலமானது கட்டப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மில்லியன் பவுண்ட் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 50 கிலோ மீட்டர் தூரத்தில் 6 கிலோ மீட்டர் தூரம் சுரங்க பாதை அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் கட்டமைப்பு பணிகள் தற்போது நிறைவுறவுள்ள நிலையில் சோதனை ஓட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக இந்த பாலம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கடல் பாலம் விரைவில் திறப்பு...
Reviewed by Author
on
April 26, 2017
Rating:

No comments:
Post a Comment