அண்மைய செய்திகள்

recent
-

பொட்டு அம்மான் குறித்து உண்மையை வெளியிட்டார் கோத்தா!


புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என்பது உண்மை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றாரா?” என்பது குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இறுதி யுத்தத்தின்போது பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை. அவருடைய சடலத்தை பாதுகாப்புப் படையினர் அடையாளம் காணவுமில்லை.

இதனாலேயே எமில்காந்தன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் உயிரிழக்கவில்லை என்று இன்று கூறப்படுவதாகவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது “பொட்டு அம்மான் உயிரிழந்தார்” என போர்க் களத்தில் இருந்த படையினர் உறுதி செய்துள்ளனர். அதை நான் நம்புகின்றேன்.

மேலும், பொட்டு அம்மான் உயிருடன் இருந்தால் அவர் இருக்கும் இடத்திலிருந்து தற்போது வெளியே வந்திருக்க வேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிரிழந்தார் என்று நான் கூறவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கபில ஹெந்தவிதாரன இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் பொழுது, பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்பது 100 வீதம் உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.


பொட்டு அம்மான் குறித்து உண்மையை வெளியிட்டார் கோத்தா! Reviewed by Author on April 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.