மன்னாரிலும் பூரண ஹர்த்தால்...இருந்தும் ஓரிரு கடைகள் திறந்துதான் இருந்தது......
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் விடுக்கப்பட்டிருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்திலும் பலதரப்பட்ட அமைப்புக்களாலும் பொது மக்களாலும் பூரண ஆதரவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னாரில் நேற்று வியாழக்கிழமை (27.04.2017) இயல்பு நிலை பாதிப்படைந்திருந்தது.
- காணாமல் ஆக்கப்பட்டோருக்காகவும்
- வேலையில்லாப்பட்டதாரிகளுக்காகவும்
- சொந்த நிலமீட்புக்காகவும் ஆதரவு வழங்கி அவர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாக....
அகிம்சைவழியில் போராடுகின்ற மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் உள்ள அனைவரும் அனைத்து கட்சிகள் அமைப்புக்கள் ஒன்றினைந்து முழுமையான கதவடைப்பு போராட்டத்தினையும் கண்டனத்தினையும் தெரிவித்தனர் ஒற்றுமையாக இணைந்தால் மட்டுமே உரிமையும் சூபீட்சமான சுகந்திரமான வாழ்வும் சாத்தியமாகும்.....
அவ்வாறு இருந்தும் ஒரு சிலர் ஒற்றைக்கதவிலும் முன்பக்கம் மூடி பின்பக்கமாகவும் வியாபாரத்திலும் தங்களது வேலைகளிலும் ஈடுபட்டனர் இவர்களை என்னவென்று சொல்வது உணர்வற்றவர்களாக எதோ தேசத்தில் வாழ்வது போலவும் தமக்கும் இந்த அறவழிப்போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்றது போலவே செயற்படுகின்றனர் இந்த போராட்டம் மட்டும் அல்ல எந்த போராட்டமாக இருந்தாலும் இவர்கள் இப்படித்தான்....
இப்படியான சிலரால் தான் இன்னும் நாம் அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...
இப்படியான சிலரால் தான் இன்னும் நாம் அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...
மன்னார் மாவட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவைகள் முற்றாக சேவையில் ஈடுபடவில்லை. பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வரவு பூச்சியமாகவே காணப்பட்டன. மன்னார் நகர் உட்பட கிராம புறங்களிலும் உணவகங்கள் உட்பட பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் காட்சியளித்தன.
இருந்தும் ஓரிரு கடைகள் திறந்துதான் இருந்தது......என்னவென்று சொல்ல அவர்களை....
நானாட்டான்....
மன்னார்........
மன்னாரிலும் பூரண ஹர்த்தால்...இருந்தும் ஓரிரு கடைகள் திறந்துதான் இருந்தது......
Reviewed by Author
on
April 28, 2017
Rating:

No comments:
Post a Comment