உலகின் வயதான விண்வெளி வீராங்கனை செய்துள்ள வரலாற்று சாதனை....
விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிருந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை என்ற சாதனையை பெக்கி விட்சன் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரிபவர் பெக்கி விட்சன் (57) விண்வெளிக்கு சென்ற உலகின் வயதான வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தகாரராக பெக்கி தற்போது விளங்கி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைத்து வருகின்றனர்.
இந்த ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள பெக்கி நேற்றுடன் விண்வெளியில் 534 நாட்களை கடந்துள்ளார்.
இதன்மூலம், அமெரிக்கா சார்பில் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த விஞ்ஞானி ஜெப் வில்லியம்சின் சாதனையை பெக்கி முறியடித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி மைய குழுவில் இரு முறை கமாண்டர் பதவி வகித்த பெண் மற்றும் விஞ்ஞான குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரே பெண் என்ற பெருமையும் பெக்கி வசமே உள்ளது.
விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்த பெக்கி விட்சனுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகின் வயதான விண்வெளி வீராங்கனை செய்துள்ள வரலாற்று சாதனை....
Reviewed by Author
on
April 28, 2017
Rating:

No comments:
Post a Comment