முத்தமிட்டுக்கொண்ட ரொனால்டோ- மெஸ்ஸி....
ஸ்பானீஷ் லீக் தொடரில், 23ம் தேதி இரவு பர்சிலோனா- ரியல்மாட்ரிட் அணிகள் மோதும் 'எல்கிளாசிகோ' மோதல் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு அணியின் ரசிகர்களை சாந்தப்படுத்தும் வகையில் பார்சிலோனா நகரில் மெஸ்ஸியும் ரொனால்டோவும் முத்தமிட்டுக் கொள்வது போன்ற புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அன்பையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் வகையில் இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இத்தாலியின் மிலன் நகரைச் சேர்ந்தவர் டி.வி. பாய் என்பவர் பார்சிலோனாவில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வருகின்றார். இவர்தான் இந்த போஸ்டரை வடிவமைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இத்தாலியில் இன்டர்மிலன்- ஏ.சி.மிலன் அணிகளின் ஆட்டத்தின் போது, ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். சாதாரண மக்கள் முதல் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள். பொதுச் சொத்துகள் சேதமடைகின்றன.
இது போன்ற ஓவியங்களாவது ரசிகர்களின் மோதல் போக்கைக் குறைக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.
முத்தமிட்டுக்கொண்ட ரொனால்டோ- மெஸ்ஸி....
Reviewed by Author
on
April 24, 2017
Rating:

No comments:
Post a Comment