முல்லைத்தீவில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்...
முல்லைத்தீவில், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தையும் விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதன்படி விடுவிக்கப்படவுள்ள கேப்பாப்புலவு மக்களின் காணிகளை இன்று நேரடியாக சென்று பார்ப்பதற்கு இராணுவத் தரப்பினர் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் இந்த கலந்துரையாடலில் இலங்கை முப்படைத் தளபதிகளுடன், தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்...
 
        Reviewed by Author
        on 
        
April 19, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
April 19, 2017
 
        Rating: 


No comments:
Post a Comment