இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர் 73 ஆவது வயதில் காலமானார்
இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்ட கால உறுப்பினரும்,மன்னார் மாவட்டத்தின் முன்னாள் திடீர் மரண விசாரனை அதிகாரியும்,தமிழ் தேசியப்பற்றாளருமான தே.பி.சிந்தாத்துரை தனது 73 ஆவது வயதில் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று(17) திங்கட்கிழமை காலை இயற்கை எய்தினார்.'மன்னார் சிந்தா' என அன்பாக அழைக்கப்படும் தே.பி.சிந்தாத்துரை அவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்ட கால உறுப்பினராக செயற்பட்டதோடு மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை இறுதி வரை மேற்கொண்டார்.
மன்னார் மாவட்டத்தின் திடீர் மரண விசாரனை அதிகாரியாக கடமையாற்றினர்.பின்னர் இறுதி வரை மன்னார் மாவட்ட ஓய்வூதிய சங்கத் தலைவராகவும் செயற்பட்டார்.
தமிழ் தேசியத்திற்காகவும்,தமிழ் மக்களுக்காகவும் பல்வேறு வகையில் இறுதி வரை குரல் கொடுத்தார்.
அரசியல் ரீதியாக பல்வேறு செயற்பாடுகளையும் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுத்ததோடு,மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தனது பங்களிப்பை வழங்கி வந்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினராக செயற்பட்டு வந்த போதும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் என அனைவருடனும் அன்பாக பழகி பல்வேறு திட்டங்களை நடை முறைப்படுத்தும் ஆற்றளைக்கொண்டிருந்தார்.
அன்னாரின் இழப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் மன்னார் மாவட்ட மக்களுக்கும் பாரிய இழப்பாக காணப்படுகின்றது.
இதே வேளை நீண்ட காலமாக எமது இனத்துக்காக போராடிய மூத்த தலைவர்களில் அமரர்.தே.பி.சிந்தாதுரை அவர்களும் முக்கியமான ஒருவர்.
அவரது இழப்பு எம் இனத்தின் பேரிழப்பாகும்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர் 73 ஆவது வயதில் காலமானார்
Reviewed by NEWMANNAR
on
April 18, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 18, 2017
Rating:

No comments:
Post a Comment