அண்மைய செய்திகள்

recent
-

அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிப்போம் மன்னிப்புச் சபை பொதுச் செயலாளர் ஷெலீல் ஷெட்டி யாழில் உறுதி


அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இரு வருட கால அவகாசத்தை அரசு பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து காலத்தை கடத்த முடியாது. அத்துடன் குறித்த கால அட்டவணைக்கு அமைய அரசு செயற் பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பிரயோகிக்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஷெலீல் ஷெட்டி யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார்.     

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வ தேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஷெலீல் ஷெட்டி தலைமையிலான குழுவினருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரனுக்கும்  இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சரின்  அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செய லாளர் ஷெலீல் ஷெட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிரந்தர அலுவலகத்தை உருவாக்குதல், காணாமல் போனவர்களின் உண்மை நிலைமைகள் கண்டறியப்பட்ட பின்னர் நிவாரணமாக இழப்பீடு வழங்குவது, பயங்கரவாதத் தடைச்சட் டத்தை நீக்குவது, உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியுள்ளோம்.

முல்லைத்தீவு உட்பட பல இடங்களுக்கும் நாங்கள் மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரத்தைச் செலவிட்டிருக்கிறோம். காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், காணாமால் ஆக்கப்பட்டுள்ள சகோதரர்கள், பிள்ளைகளின் குடும்பங்களை நாங்கள் சந்தித்திருக்கின்றோம்.

இந்த மக்கள் இனிமேலும் காத்திருக்க முடியாது. எட்டு வருடங்களாக அவர்கள் துன்பப்பட்டிருக்கின்றார்கள். எனவே, அரசாங்கம் உண்மையான நடவடிக்கையைக் காட்டுவதற்கான நேரம் வந்துள்ளது. இந்த விடயங்கள் குறித்து முதலமைச்சருடனும் பேச்சுவார்த்தை  நட த்த நேரம் கிடைத்திருப்பது நல்லது என நினைக்கிறோம்.

சர்வதேச மன்னிப்புச்சபை என்ற வகையில் நாங்கள் அரசாங்கத்தின் மீது  தொடர்ந்து அழுத்தத்தைப் பிரயோகிப்போம். அத்துடன். சர்வதேசத்தின் மீது ஜெனிவாவிலும்இ உலகத்தின் அனைத்து இடங்களிலும் நாங்கள் எங்களுடைய அழுத்தத்தைப் பிரயோகிப்போம்.

முக்கியமான பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்காகவே ஐநா மனித உரிமைகள் பேரவையினால் அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டி ருக்கின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தை அரசாங்கம் காலம் கடத்த முடியாது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முதலமைச்சருடனான சந்திப்பின் போது நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம் என்றார். 

அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிப்போம் மன்னிப்புச் சபை பொதுச் செயலாளர் ஷெலீல் ஷெட்டி யாழில் உறுதி Reviewed by Author on April 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.