அமெரிக்காவை மிரட்டிய வடகொரியாவுக்கு தோல்வி.....
வடகொரியா மேற்கொண்ட மற்றொரு ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளதால், அந்நாட்டு அரசு மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளது.
வடகொரியா இதுவரை இரண்டு அணுகுண்டு சோதனைகளையும், 24 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளையும் செய்துள்ளது.
ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தன்னை தற்காத்து கொள்வதற்கே இந்த சோதனை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
இருப்பினும் உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா பல்வேறு அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்வது பல்வேறு நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த செயலால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் போர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சின்போ என்ற கிழக்கில் உள்ள துறைமுகத்தில் இருந்து புதிய வகை ஏவுகணையான பாலிஸ்டிக் ஏவுகணை என்று நம்பப்படும் ஏவுகணையை கண்டுபிடித்து பின்தொடர்ந்த சோதனை தோல்வியில் முடிந்தது.
இதனை அமெரிக்கா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் உறுதி செய்து செய்தியாக வெளியிட்டன. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த வடகொரிய மீண்டும் ஏவுகணை சோதனையை பத்து நாட்களில் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து வடகொரியா உள்ளூர் நேரப்படி (29.04.2017) சனிக்கிழமை காலை மீண்டும் தனது ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது.
சில தூரம் மேலே சென்ற இந்த ஏவுகணை அந்த இடத்திலே வெடித்துச் சிதறியுள்ளது. இதை அமெரிக்காவும் உறுதிபடுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்கா தெரிவிக்கையில், இந்த சோதனைக்கு முன்னர் பிற்பகலில் இருந்தே வடகொரியாவை கண்கானித்து வந்ததாகவும், வடகொரியா மேற்கொண்ட இந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளது.
வடகொரியா மேற்கொண்ட இந்த ஏவுகணை சோதனை எந்த வகையான ஏவுகனை சோதனை என்பதை உறுதிபடுத்தமுடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இருப்பினும் அது நடுத்தர அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை தான் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை அழிப்பதற்கு நாங்கள் தயார் என்று சவால் விட்டு வரும் வடகொரியாவுக்கு கடந்த சில தினங்களில் ஏவுகணை சோதனையால் இரண்டு தடவை தோல்வி ஏற்பட்டு, அடி மேல் அடி வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை மிரட்டிய வடகொரியாவுக்கு தோல்வி.....
Reviewed by Author
on
April 29, 2017
Rating:

No comments:
Post a Comment