ஆண்டங்குளம் புதிதாக தாமரைத்தடாகத்திலான புனித தோமையார் சிலை வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(படம்)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டங்குளம் குமனாயங்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாமரைத்தடாகத்திலான'புனித தோமையார் சிலை'நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட் தந்தை அன்ரனி விக்டர் சோசை தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டளவில் குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட குறித்த தோமையார் சிலை யுத்தத்தின் காரணமாக சேதமடைந்திருந்தது.
இன,மத பேதங்கள் இன்றி அனைவரினாலும் எற்றுக்கொள்ளப்பட்ட புனித தோமையார் அவர்களின் சிலையினை மீண்டும் குறித்த பகுதியில் புதிதாக அமைக்க வேண்டும் என குறித்த கிராம மக்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக புதிய வடிவத்தில் தாமரைத்தடாகத்திலான 'புனித தோமையார் சிலை' சுமார் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட்ட தாமரைத்தடாகத்திலான 'புனித தோமையார் சிலை' நேற்று வியாழக்கிழமை மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை குறித்த சிலை யினை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,பங்கு மக்கள்,குறித்த கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
1984 ஆம் ஆண்டளவில் குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட குறித்த தோமையார் சிலை யுத்தத்தின் காரணமாக சேதமடைந்திருந்தது.
இன,மத பேதங்கள் இன்றி அனைவரினாலும் எற்றுக்கொள்ளப்பட்ட புனித தோமையார் அவர்களின் சிலையினை மீண்டும் குறித்த பகுதியில் புதிதாக அமைக்க வேண்டும் என குறித்த கிராம மக்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக புதிய வடிவத்தில் தாமரைத்தடாகத்திலான 'புனித தோமையார் சிலை' சுமார் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட்ட தாமரைத்தடாகத்திலான 'புனித தோமையார் சிலை' நேற்று வியாழக்கிழமை மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை குறித்த சிலை யினை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,பங்கு மக்கள்,குறித்த கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
ஆண்டங்குளம் புதிதாக தாமரைத்தடாகத்திலான புனித தோமையார் சிலை வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(படம்)
Reviewed by Author
on
April 28, 2017
Rating:

No comments:
Post a Comment