அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேச செயலகத்தில் காணிவிடுவிப்பு விசேட கலந்துரையாடலில் சலசலப்பு.....27-04-2017



வில்பத்து தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், கடந்த 03ஆம் திகதி, ஜனாதிபதி செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், இவ்விஜயம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.


ஜனாதிபதியின் பணிப்பிற்கு அமைவாக....
காலை 10.30 மணியளவில் முசலி பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல் 27-04-2017  இடம் பெற்றது. கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், எம்.எச்.எம். சல்மான், மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், ஏ.எல். தவம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி குனைஸ் பாரூக்,சட்டத்தரணி முத்தலிப் பாபா பாரூக்,

கடற்படை அதிகாரிகள், வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் அதிகாரிகள், பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஹஸ்புல்லா மற்றும் விரிவுரையாளர் நௌபல் மற்றும் முசலி பிரதேச மக்கள், முசலி பிரதேசச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததோடு அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பணிப்புரைக்கு அமைவாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவியும் கலந்து கொண்டிருந்தார்.

முதற்கட்டமாக முசலி பிரதேச செயலகத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

எனினும் கலந்துரையாடலுக்கு பதிலாக பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஹஸ்புல்லா மற்றும் விரிவுரையாளர் நௌபல் ஆகியோர் வில்பத்து தொடர்பில் விளக்கமொன்றினை முதலில் சிங்கள மொழியிலும் பின் தமிழ்மொழியிலும் வழங்கினர்.

எனினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளாமை குறித்து
32 நாட்களாக போராடிக்கொண்டு இருக்கும் மக்களையும் பாராமளும் அந்த மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் யாரையும் அனுமதிக்காமல் கலந்துரையாடல் நடத்தியமையே குழப்பத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது

இதே வேளை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி எழுந்து கருத்தை வெளியிட்டார்.

குறித்த கலந்துiராயாடலுக்கு ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் வருவதாக கூறியிருந்தார்கள்.

அவர் வருகை தரவில்லை. எனவே நான் குறித்த கலந்துரையாடலில் இருந்து வெளியேறுகின்றேன் எனக் கூறி அங்கிருந்து சென்றார்.

அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலில் சிலர் குறித்த கலந்துரையாடலானது வில்பத்து விவகாரம் தொடர்பில் இடம் பெறுகின்றதா அல்லது அரசியல் ரீதியாக இடம் பெறுகின்றதா என்ற கேள்வியை எழுப்பினர்.

 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

முசலி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் புதிதாக பிரகடனப்படுத்தப்பட்ட வில்பத்து தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மேலும் , பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஹஸ்புல்லா மற்றும் விரிவுரையாளர் நௌபல் ஆகியோர் அதிகாரிகள் முன்னிலையில் வில்பத்து தொடர்பாக விரிவான விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளனர்.

மறிச்சுக்கட்டி பகுதியில் களப்பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். அதன் பிற்பாடு அதிகாரிகள் தாம் தயாரித்த அறிக்கையை மேலதிகாரிகளுக்கு சமர்ப்பித்த பின்பு நாங்கள், சுற்றாடல் மற்றும் வனப்பரிபாலன அமைச்சின் செயலாளர் முன்னிலையில் இவ்விடையம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கின்ற மேலதிக சந்திப்பொன்றையும் நடத்தவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


 



































முசலி பிரதேச செயலகத்தில் காணிவிடுவிப்பு விசேட கலந்துரையாடலில் சலசலப்பு.....27-04-2017 Reviewed by Author on April 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.