உலகிலேயே மோசமான விமான நிலையம் இது தான்....
மக்கள் சேவையில் உலகிலேயே மோசமான விமான நிலையமாக அமெரிக்காவில் உள்ள JFK விமான நிலையம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நுகர்வோர் உரிமைகள் வலைத்தளம் ஒன்று சமீபத்தில் மக்களிடம் விமான நிலையங்கள் குறித்து ஆய்வு நடத்தியது.
அதில், பிரித்தானியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் JFK விமான நிலையம் தான் உலகிலேயே மோசமான விமான நிலையம் என ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அங்கு சுற்றுலா செல்லும் போது மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக தாங்கள் காக்க வைக்கப்பட்டதாக குமுறியுள்ளனர்.
மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
மூன்றாம் இடத்தில் சிங்கப்பூரின் San Francisco விமான நிலையம் உள்ளது.
இந்த பட்டியலில் ஆறாம் இடத்தில் பிரித்தானியாவின் Glasgow விமான நிலையம் உள்ளது.
இது குறித்து நுகர்வோர் வளைதள நிறுவனர் James Walker கூறுகையில், விமானம் தாமதமாவது மற்றும் திடீரென ரத்தாவது என்பதே பெரும்பாலான பயணிகளின் புகாராக உள்ளது.
மேலும், பயணிகளை நடத்தும் விதம் குறித்து புகார் வருகிறது என கூறியுள்ளார். கடந்த வருடம் மட்டும் விமானம் தொடர்பாக 84,287 புகார்கள் பயணிகளிடமிருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மோசமான விமான நிலையம் இது தான்....
Reviewed by Author
on
April 24, 2017
Rating:

No comments:
Post a Comment