மன்னார் பூமலர்ந்தான் அ.த.க. பாடசாலை கட்டிட அடிக்கல் நாட்டுவிழா.....-Photos
மன்னார் பூமலர்ந்தான் அ.த.க. பாடசாலை கட்டிட வசதிகளற்று நீண்டகாலமாக தற்காலிக கொட்டில்களில் கல்வியினைத் தொடர்ந்து வந்த மன்னார் மலர்ந்தான் அ.த.க. பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் முயற்சியின் பலனால் மீள் குடியேற்ற அமைச்சின் நிதி உதவியினால் மன் / பூமலர்ந்தான் அ.த.க. பாடசாலைக்கான ஆரம்ப பாடசாலைக் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்று மு.ப.11.00 மணியளவில் பாடசாலை அதிபர் விக்ரர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், மடுவலயக் கல்விப்பணிப்பாளர் வு. குயின்ரஸ், மடு பிரதேச செயலகத்தின் உதவித்திட்டப் பணிப்பாளர் றொகான், மடு ஆலய துணை பரிபாலகர் தயாபரன், இந்துமத குரு பன்னீர்ச்செல்வம் ஐயா மற்றும் கிராம அலுவலர்கள் மக்கள் மாணவர்கள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
மன்னார் பூமலர்ந்தான் அ.த.க. பாடசாலை கட்டிட அடிக்கல் நாட்டுவிழா.....-Photos
Reviewed by Author
on
May 23, 2017
Rating:

No comments:
Post a Comment