ரூ.9,000 கோடி 2 வருடத்தில் நிறுவனம்! சீனாவை புரட்டி போட்ட கூகிள் முன்னாள் ஊழியர்
சீனாவைச் சேர்ந்த கோலின் ஹூகன் 21 மாதங்களில் ரூ.9,000 கோடி நிறுவனத்தை உருவாக்கி புதிய முயற்சியில் வெற்றி அடைந்துள்ளார்.
இவர் துவங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனம் வெறும் 21 மாதங்களில் சந்தையிலும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுத் தற்போது 9,642 கோடி ரூபாய் மதிப்பிலான வெற்றிக்கோட்டையாக மாறியுள்ளது.
கல்லூரி படிப்பை முடித்த உடன் சிலிக்கான் வேலியில் தனது பணியைத் துவங்கிய கோலின் ஹூகன். கூகிள் நிறுவனத்தில் பணியாற்றிய போது அதன் ஈகாமர்ஸ் அல்காரிதம்-இல் முக்கியப் பணியாற்றிய அனுபவம் கிடைத்துள்ளது.
இதனை அடிப்படையாக வைத்து அமெரிக்காவில் இருந்து தாய்நாட்டிற்குத் திரும்பிய கோலின் Pinduoduo என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் துவங்கினார்.
PDD என்று சீனாவில் அழைக்கப்படும் Pinduoduo நிறுவனத்தைத் துவக்கும்போது ஈகாமர்ஸ் சந்தையை இது புரட்டி போடும் என்று யாரும் நினைக்கவில்லை.
இந்த நிறுவனத்தைத் துவங்கிய போது 100 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்த PDD, 21 மாதங்களில் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இன்று இந்நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் யுவான்(1.5 பில்லியன் டாலர்). இது இந்திய ரூபாய் மதிப்பில் 9,642 கோடி ரூபாய் ஆகும்.
ரூ.9,000 கோடி 2 வருடத்தில்  நிறுவனம்! சீனாவை புரட்டி போட்ட கூகிள் முன்னாள் ஊழியர்
 Reviewed by Author
        on 
        
May 01, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 01, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
May 01, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 01, 2017
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment