முதன் முறையாக கால்பந்து வரலாற்றில் இத்தாலியை ஊதி தள்ளியது இந்தியா....
17 வயதுக்குட்பட்ட இளையோருக்கான நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் இந்திய அணி, இத்தாலி அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய கால்பந்து அணி இத்தாலி அணியை 2–0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் இந்தியாவில் 17 வயதுக்குட்பட்ட அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் 6ம் திகதி முதல் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கு தயாராகும் வகையில் பயிற்சியாளர் லூயிஸ் டி மாடோஸ் தலைமையிலான 26 பேர் கொண்ட இந்திய அணி, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறது.
கடந்த வாரம் போர்ச்சுகலில் நடந்த ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றது.
தற்போது இத்தாலி சென்றுள்ள இந்திய அணி, அங்குள்ள 17 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றது.
போட்டியின் 31வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஜித் சர்கார், முதல் கோல் அடித்தார். 80வது நிமிடத்தில் ராகுல் ஒரு கோல் அடித்தார்.
இறுதிவரை போராடிய இத்தாலி அணியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. இதனால், இந்திய அணி 2–0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்தியா அணியின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
முதன் முறையாக கால்பந்து வரலாற்றில் இத்தாலியை ஊதி தள்ளியது இந்தியா....
Reviewed by Author
on
May 20, 2017
Rating:

No comments:
Post a Comment