பிரதமர் ரணில் ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு-(படம்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அதிகாரசபையினருக்கிடையில் நேற்று(19) வெள்ளிக்கிழமை மதியம் மாவட்டச் செயலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி உதவியுடன் சுமார் 305 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4 மாடிக்கட்டிடத்தொகுதி திறப்பு விழா நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அமைச்சர்களான வஜீர அபேவர்த்தன,றிஸாட் பதியுதீன்,ரி.எம்.சுவாமிநாதன்,சாகல ரத்னாயக்க, பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான், மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து குறித்த மாவட்டச் செயலகத்தின் புதிய 4 மாடிக்கட்டிடத்தொகுதியை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
-அதனைத் தொடர்ந்து அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதனின் ஏற்பாட்டில் -பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,ஐக்கிய தேசியக்கட்சியின் மான்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அதிகாரசபையினருக்கிடையில் மாவட்டச் செயலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.
-இதன் போது ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமீயூ முகம்மது பஸ்மி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்தும்,கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் பிரதமருடன் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- மன்னார் நிருபர்-

பிரதமர் ரணில் ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு-(படம்)
Reviewed by Author
on
May 20, 2017
Rating:

No comments:
Post a Comment