படையினர் வசமுள்ள காணிகளை விடுப்பதற்காக தொடரும் போராட்டங்கள்....
யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ள போதும் கூட மக்கள் தங்களுடைய காணிகளை விடுவிப்பதற்காக பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் பாடுபட்டு வருகின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
30 வருட யுத்தத்தின் போது மக்கள் பல துன்பங்களை சந்தித்ததுடன், தமது பூர்வீக காணிகளையும் இழந்தனர். இந்தநிலையில் அந்த காணிகளுக்காக பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும் அவர்களுடைய காணிகள் இன்றையளவிலும் படையினரின் வசமே உள்ளன. எனவே இது தொடர்பில் உடனடி கவனமெடுத்து மக்களுக்கு தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படையினர் வசமுள்ள காணிகளை விடுப்பதற்காக தொடரும் போராட்டங்கள்....
Reviewed by Author
on
May 25, 2017
Rating:

No comments:
Post a Comment