அண்மைய செய்திகள்

recent
-

தொழிலாளர்கள் மூலம் ஒருமைப்பாட்டுடனான இலங்கையை கட்டியெழுப்புவோம் - காதர் மஸ்தான்


தொழிலாளர்கள் மூலம்  ஒருமைப்பாட்டுடனான இலங்கையை கட்டியெழுப்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தினம் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியில் மஸ்தான் எம்.பியினால்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நட்டின் முன்னேற்றத்திற்கு தங்காளால் ஆன அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கே உரித்தான இந்த நாளில் அனைத்து தொழிலார்களும் ஊருமைப்பாட்டுடன் செயற்பட வேண்டும்.

இன்றும் வட கிழக்கில் பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை மிகவும் கவலையளிக்கின்றது. நாடு ஒரு பக்கத்தில் வளர்ச்சிப்பாதையில் பயணித்தாலும் இவ்வாறு பட்டதாரிகள் வீதியில் தொழிலொன்றை பெற்றுத்தருமாறு கோரி நிற்பது நல்லாட்சிக்கு ஏதுவானதல்ல.

மேலும் அரசியலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடக கொண்டாடும் எனது  இரண்டாவது தொழிலாளர் தினமாகும் இந்த காலப்பகுதியில் என்னிடம் பணிபுரிகின்ற தொழிலார்களை நான் கௌரவப்படுத்தியுள்ளேன் அதுபோல ஏனைய தலைவர்களும் தங்களிடம் பனி புரியும் தொழிலார்களை கௌரவப்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

கடுமையாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  வன்னி மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளுக்கு விரைவாக தொழில்களை பெற்றுக்கொடுக்குமாறு எமது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கோரியுள்ளேன் அதற்கு ஜனாதிபதியும் விரைவாக தீர்வொன்றை பெற்றுத்தருவதாக கூறினார்.

இன்று கண்டியில் இடம்பெறும் தொழிலாளர் தினத்திற்கு வன்னி மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களை 21 பேரூந்துகள் மூலம் அழைத்து  செல்கின்றேன் இவ்வாறு நான் கூட்டிச்செல்வது எனது பலத்தை காட்டவல்ல மாறாக இந்த ஆதரவாளர்களை பார்த்தாவது ஜனாதிபதி எமது வன்னி மாவட்டத்துக்கான தொழில், அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

நேர்மையான தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட நல்லாட்சியில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் மூலம் ஒருமைப்பாட்டுடனான இலங்கையை கட்டியெழுப்புவோம் - காதர் மஸ்தான் Reviewed by Author on May 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.