மோடியின் நிகழ்வினால் சர்ச்சையில் சிக்கிய ரணில்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்ச்சையில் சிக்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின விழா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க பௌத்த கொடியை தலை கீழாக அணிந்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவும் இணையத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஏனையோர் சரியான முறையில் பௌத்த கொடியை அணிந்திருந்ததாகவும் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மோடியின் நிகழ்வினால் சர்ச்சையில் சிக்கிய ரணில்!
Reviewed by NEWMANNAR
on
May 13, 2017
Rating:

No comments:
Post a Comment