போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள்! யஸ்மின் சூகா வலியுறுத்தல்...
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது, மாறாக அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிடம் குறித்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள அவர்,
ஜகத் டயஸின் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஹெய்ட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் வரையில் ஹெய்ட்டியில் இலங்கைப் படையினர் நிறுத்தப்படக் கூடாது.
ஜகத் டயஸ் தலைமை தாங்கிய 57வது படைப்பிரிவினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியமை பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள்! யஸ்மின் சூகா வலியுறுத்தல்...
Reviewed by Author
on
May 28, 2017
Rating:

No comments:
Post a Comment