உலகின் சக்தி வாய்ந்த டாப் 5 மனிதர்களின் பட்டியல்.....இதோ....
2017ல் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
டாப் 5 சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியல்
விளாடிமிர் புடின் (63)

ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2012லிருந்து ஜனாதிபதி பதவியில் இருக்கும் புடின் ஏற்கனவே இருமுறை ரஷ்யாவின் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.
ஏஞ்சலா மெர்கல் (62)

கடந்த 2005லிருந்து ஜேர்மனியின் சான்சிலராக பதவி வகிக்கும் ஏஞ்சலா கடந்த 2007-ல் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராகவும் பொறுப்பேற்றார். அந்த பதவியில் அமர்ந்த இரண்டாவது பெண் என்ற பெருமையும் ஏஞ்சலா வசமே உள்ளது.
பராக் ஒபாமா (55)

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா முதல் முறையாக அந்த பதவியை கடந்த 2009ல் ஏற்றார். அதன்பிறகு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்று சாதனை படைத்தார் ஒபாமா.
போப் பிரான்ஸிஸ் (80)

போப் பிரான்ஸிஸ்-ன் இயற்பெயர் Jorge Mario என்பதாகும். ரோமன் காத்தலிக் தேவாலயத்தின் 266வது போப்-ஆக இவர் கடந்த 2013ல் பதவியேற்று கொண்டார்.
போப் Benedict தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து புதிய போப்பாக பிரான்ஸிஸ் பொறுப்பேற்றார்.
ஜீ ஜின்பிங் (63)

சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் ஜீ ஜின்பிங், சீனாவின் ஜனாதிபதி ஆவார். இவர் கடந்த 1999லிருந்து 2002 வரை Fujian மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார். மேலும் 2002லிருந்து 2007 வரை தனது கட்சியின் குழு செயலாளர் மற்றும் Zhejiang மாகாணத்தின் கவர்னர் என இரு பதவிகளை வகித்துள்ளார்.
உலகின் சக்தி வாய்ந்த டாப் 5 மனிதர்களின் பட்டியல்.....இதோ....
Reviewed by Author
on
June 25, 2017
Rating:

No comments:
Post a Comment