லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் மீண்டும் தீ ....
லண்டனில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Bethnal Green பகுதியின் Turin வீதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்தை தொடர்ந்து அங்கு 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தீ விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை. சமீபத்தில் தான் லண்டனில் உள்ள 27-மாடி குடியிருப்பைக் கொண்ட கிரென் பெல் டவரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக 79-பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் மீண்டும் தீ ....
Reviewed by Author
on
June 25, 2017
Rating:

No comments:
Post a Comment