சுவிஸை புரட்டிப் போடும் புயல்: மக்களுக்கு கடும் எச்சரிக்கை...
சுவிஸில் புயல் காரணமாக மீண்டும் இடி, மின்னலுடன் பலத்த மழை பொழியும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புயல் குறித்து வானிலை சேவை மையம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்த புயல் வடமேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையில் வருகிறது.
புயல் காரணமாக சூரிச் உட்பட பல பகுதியில் பெருமளவிற்கு மழைப்பொழிவு மற்றும் சில நேரங்களில் சிறிய அளவிலான ஆலங்கட்டி மழை பொழியும், இதனால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேசமயம், உயர் மின்னல் மற்றும் இடி ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெந்தேகோஸ்தே நாளன்று, வானிலை படிப்படியாக அமைதியாகிவிடும். எனினும், தற்போது மிகவும் குளிராக உள்ள நிலையில் வெப்பநிலை 19 முதல் 22 டிகிரி வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸை புரட்டிப் போடும் புயல்: மக்களுக்கு கடும் எச்சரிக்கை...
Reviewed by Author
on
June 04, 2017
Rating:

No comments:
Post a Comment