அமெரிக்கா கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சிந்துஜா சாதனை...
ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் அசத்தி இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கத்தை தந்து பெருமை சேர்த்தார் பி.வி.சிந்து.
தற்போது அதே போல தெலுங்கானாவைச்சேர்ந்த சிந்துஜா ரெட்டி என்ற இளம்பெண் அமெரிக்கா கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார்.
ரஞ்சி கிண்ணப் போட்டியில் ஐதராபாத் மகளிர் அணிக்காக இணைந்து விளையாடியவர் திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
எம்பிஏ படித்துள்ள சிந்துஜாவுக்கு மீண்டும் கிரிக்கெட் ஆசை வர அமெரிக்காவில் உள்ளூர் அணியில் இடம்பிடித்ததுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அசத்தினார்.
இந்நிலையில் அமெரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாட சிந்துஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதனையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் ஸ்காட்லாந்தில் நடைபெறவுள்ள உலக மகளிர் டி20 கிரிக்கெட் கிண்ண தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடவுள்ளார்.
அமெரிக்கா கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சிந்துஜா சாதனை...
Reviewed by Author
on
June 29, 2017
Rating:

No comments:
Post a Comment