அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களின் உடலில் சிங்களவர்களின் இரத்தம்! வடக்கு ஆளுநர்-கண்டுபிடிப்பு.....


வடக்கில் இருக்கும் தமிழர்களின் உடலில் இனி சிங்களவர்களின் இரத்தமே ஓடும் என வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடமாகாணமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது இரண்டு பிள்ளைகளையும் சிங்கள தம்பதியினருக்கே திருமணம் முடித்துக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் நடாத்தப்பட்ட என்.வி.கியூ பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த 100 பிக்குகள் யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக் கொடை வழங்கியுள்ளனர்.

சகோதர மக்களுக்கு சுகவீனம் ஏற்படும்போது எமது குருதியைக் வழங்குங்கள் என தெரிவித்தே குறித்த பிக்குகள் குருதிக் கொடை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், வடக்கில் இருக்கும் தமிழர்களின் உடலில் இனி சிங்களவர்களின் இரத்தமே ஓடும் என வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் உடலில் சிங்களவர்களின் இரத்தம்! வடக்கு ஆளுநர்-கண்டுபிடிப்பு..... Reviewed by Author on June 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.